செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்கள்! சீனாவின் ஜூராங் ரோவர்!

0
238
New photos of Mars! China's Jurong Rover!
New photos of Mars! China's Jurong Rover!

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்கள்! சீனாவின் ஜூராங் ரோவர்!

உலகளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்திவரும் வல்லரசு நாடுகள் விண்வெளியிலும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றது. நிலவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நாடுகள் தற்போது செவ்வாய் கிரகத்தின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை செலவிட்டு குறிப்பிடத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர்.

சந்திராயன் விண்கலம் மூலம் நிலவில் நீர் இருந்ததற்கான ஆதாரத்தை இந்தியா கண்டறிந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய விண்கலம் ஆனது கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வேன் 1 கடந்த பிப்ரவரி மாதம் ரோவர் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.

6 சக்கரங்களைக் கொண்ட ரோவர் கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும். இதற்கிடையில் சீனா அனுப்பிய தியான்மென் ரோவர் விண்கலம் கடந்த 15-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. தியான்வென் பயணத்தின் ஒரு பகுதியாக சூரிய சக்தியில் இயங்கும். இதுதான் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டது.

செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல் குறித்து ஆராய்வதற்காக சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை அனுப்பியது. மே 21-ஆம் தேதி அந்த ரோவர் தரை இறங்கியது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள சுற்றுப் பாதையில் இருந்து இறங்கிய பிறகு தனது செவ்வாய் பயணத்தை உட்டோபியா பிளானிட்டியாவில் தொடங்கியது. மே 22ஆம் தேதி முதல் செவ்வாயில் பயணித்து ஆய்வு செய்து வருகிறது.

இது ஒரு மென்மையான சமவெளி என்றும் நாசாவின் வைக்கிங் 2 லேண்டர் 1976-ல் இந்த பகுதியை தொட்டது. இது ஜெசரோ பள்ளத்திலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்க ரோவர் உள்ளது. செவ்வாய் கிரகத்தின் பரப்பை காட்டும் வகையில் சீனாவின் ரோவர் ஜூராங் எடுத்த முயற்சியில், புதிய புகைப்படங்களை  சீன தேசிய விண்வெளி அமைப்பு வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பயணித்து வரும் ரோவர் ஜுராங் செவ்வாயின் மேற்பரப்புகள், பாறைகள், மற்றும் கற்களை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

Previous articleமிக மோசமான வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை! 25 நாடுகளுக்கு பாதிப்பு!
Next articleசர்ச்சையில் சிக்கிய அமேசான்! ரூ.96000 ஏசி வெறும் ரூ.5000!