மிக மோசமான வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை! 25 நாடுகளுக்கு பாதிப்பு!

0
79

உலக சுகாதார நிறுவனம் மிக மோசமான கொரோனா வைரஸ்களில் ஒன்று லாம்ப்டா என தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது ஓராண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றானது வெவ்வேறு வகையில் மாற்றமடைந்துள்ளது.

அவற்றை ஆல்பா, பீட்டா, டெல்டா என்று பெயரிட்டு ஆய்வுகளை செய்து வருகின்றனர். இந்தியாவில் உண்டான டெல்டா வகையின் மாற்றமடைந்த வேரியண்டான டெல்டா பிளஸ் உலக நாடுகளால் ஆபத்திற்கு உரியதாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள லாம்ப்டா வேரியண்டானது டெல்டா பிளஸை விட மிகவும் வீரியமிக்கது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவ்வகையானது மிகவும் வீரியம் உள்ளதாகவும், அதிவேகத்தில் பரவி வருவதன் காரணமாகவும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலைக்கு இந்த வகை முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

தென் அமெரிக்க நாடான பெருவில் முதன்முதலில் ஜூன் 14ஆம் தேதி லாம்ப்டா வகை கண்டறியப்பட்டுள்ளது. மிகக் குறுகிய நாட்களிலேயே கிட்டத்தட்ட இந்த வகையானது 25 நாடுகளில் பரவி இருப்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் கண்டறியப்பட்ட மிக மோசமான கொரோனா வைரஸ்களில் ஒன்று தான் லாம்ப்டா என உலக சுகாதார நிறுவனமானது தெரிவித்துள்ளது.

author avatar
Jayachithra