அடுத்தடுத்து வெளியாகும் புது படங்கள்!! திரைக்கு வரும் முன்பே தொலைக்காட்சியில்!!

0
90
New pictures to be released next !! On TV before it hits the screens !!
New pictures to be released next !! On TV before it hits the screens !!

அடுத்தடுத்து வெளியாகும் புது படங்கள்!! திரைக்கு வரும் முன்பே தொலைக்காட்சியில்!!

தமிழகத்தை கடந்த இரண்டரை வருடமாக துரத்தி வரும் கொரோனா பரவல் அச்சத்தால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல திட்டங்கள் அமளுக்கு வந்துள்ளது. இதில் ஒன்றாக பொதுமக்கள் கூடும் இடங்களான திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றிர்க்கு தமிழக அரசு தடை விதித்தது. சில மாதங்களுக்குப் பிறகு உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு உண்டான தடைகளை மட்டும் விலகி தளர்வு ஏற்பட்டது.

ஆனால் திரையரங்குகளுக்கு மட்டும் தடையை நீட்டித்துக் கொண்டே உள்ளது. இதனால் திரைத்துறை மிகவும் பின்னடைவை கண்டு வருகிறது. இதை தொடர்ந்து திரையரங்குகளில் எந்த ஒரு திரைப்படமும் ரிலீஸ் செய்ய முடியாத
நிலையில், படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட சினிமா துறை முடிவு எடுத்தது. மேலும் எதிர்பாராத வகையில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் பெரும் அளவில் ஆதரவு கொடுத்தனர். இதனால் பல முன்னணி நடிகர்களின் திரைப்படம் கூட ஓடிடி தளத்தில் தான் வெளியானது.

மேலும் பல படங்கள் ஓடிடி வெளியிடும் முன்பே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. நாங்க ரொம்ப பிஸி, மண்டேலா, புலிக்குத்தி பாண்டி, ஏலே, வெள்ளை யானை, வணக்கம் மாப்ள ஆகிய படங்கள் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவான துக்ளக் தர்பார் திரைப்படம் ஓடிடி வெளியாகும் முன்பே நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது என்று தகவல் இதைத் தொடர்ந்து தற்போது சினிமா துறையில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகையின் படம் கூட நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் உருவான பூமிகா திரைப்படம் தான் அது. இந்த பாகத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாகும். மேலும் இது ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் ஆகும். இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படக்குழு முடிவெடுத்துள்ளனர்.

author avatar
CineDesk