திமுகவின் வெற்றி நாங்கள் இட்ட பிச்சை! பாதிரியார் ஆவேச பேச்சு!

0
353
DMK's success is our begging! Priest furious speech!
DMK's success is our begging! Priest furious speech!

திமுகவின் வெற்றி நாங்கள் இட்ட பிச்சை! பாதிரியார் ஆவேச பேச்சு!

கன்னியாகுமரி மாவட்டத்தின் அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாரதியார் ஜார்ஜ் பொன்னையா பேசினார். இந்து சமய அறநிலையத்துறை சேகர்பாபு பற்றி கழுவி கழுவி இவர் ஊற்றுகிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எத்தனை கோவிலுக்குச் சென்று கும்பாபிஷேகம் செய்தாலும், எத்தனை கோவிலுக்கு சென்று துணி உடுத்தாமல் சாமி கும்பிட்டாலும் இந்துக்கள் ஒருவர் கூட உங்களுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்றும் கூறினார்.

மண்டைக்காடு அம்மன் பக்தர்களும், இந்துக்களும் உங்களை ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்க வில்லை என்றும், பெரிய பழியை தூக்கிப் போட்டுள்ளார். தி.மு.க ஜெயித்தது கிறிஸ்தவ மக்களும், முஸ்லிம் மக்களும், உங்களுக்கு போட்ட பிச்சை என்று தி.மு.க வை மிகவும் கொச்சையாக சாடியுள்ளார். இதை மறந்து விடாதீர்கள் என்றும் கூறியுள்ளார். உங்கள் திறமைகளை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை.

உங்களுக்கு ஓட்டு போட சொன்னது யார்? எங்களின் ஆயர்கள், மற்றும் எங்கள் கண் அசைப்பார்கள் தான் என்றும், கிறிஸ்தவ ஊழியர்கள், பெத்த கோஸ்தே ஊழியர்கள் வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்டார்கள். நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில், கூட திமுக மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜனிடம் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்து நாங்கள் ஓட்டு கேட்கிறோம் என்று கூறினோம்.

ஆனால், அவரோ வேண்டாம், வேண்டாம் இதனால் இந்துக்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விட்டால், என்ன செய்வது? என்று மறுத்துவிட்டார். இதனால் எ.ம்ஆர் காந்தி பா.ஜ  நாகர்கோவிலில் ஜெயித்துவிட்டார். பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம். பாரதமாதா மீது செருப்பு பட்டு விடக்கூடாதாம். ஆனால் நாம் ஷூ போட்டுக்  கொண்டிருக்கிறோம்.

எதற்கு?  பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக்கூடாது. என்பதற்காக நாம் ஷூ போட்டு மிதிக்கிறோம். நமக்கு சொறி, சிரங்கு வந்துவிடக்கூடாது என, தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்தது. இந்த பூமாதேவி ரொம்ப டேஞ்சரான ஆள் என்றும், சிரங்கு பிடிக்கும், அதனால செருப்பு போட்டுக்கோங்க கொடுக்கிறார்களா?

ஆனால் அழகாக சொன்னார்கள் இஸ்லாமியர்கள். எங்கள் முடி அதாவது ரோமத்தை கூட, ரோமம் என்ன எங்கள் பாஷையில் எங்க மயிரை கூட நீங்க பிடுங்க முடியாது. அதன் அர்த்தம் பைபிளில் இருக்கு. ஒரு மயிரை கூட புடுங்க முடியாது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாங்கள் மெஜாரிட்டி 42 சதவிகிதம் இருந்தோம். இப்போது அது 62 சதவீதத்தைத் தாண்டி விட்டது.

விரைவில் அது 70 சதவிகிதத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நாங்கள் வளர்ந்து கொண்டுதான் இருப்போம். உங்களால் அதை தடுக்க முடியாது என்றும், அதனை மிகவும் எச்சரிக்கையாக இந்து சகோதரர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்கிறோம் என்றும் கூறினார். மேலும் ஆர்.எஸ்.எஸ் காரன் என்றாலும் சரி, பாஜக என்றாலும் சரி, எங்களுக்கு கவலையே கிடையாது.

நீ எங்களை தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் கடைசி காலம் மிகவும் பரிதாபமாக இருக்கும் என்று  எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாம் நம்புகின்ற கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால், அமித் ஷா மற்றும் மோடியை நாயும், புழுக்களும்  சாப்பிடும் நிலையை விரைவில் வரலாறு காண வேண்டும் என்றும் சாபமிட்டார்.

வரலாறு காணும் எங்களது சாபம் உங்களை அழிக்கும், நிர்மூலமாக்கும், என்றும் ஆவேசமாக பேசியுள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த நுஷ்யா என்பவர் பாதிரியார் சார்ஜ் பொன்னையா, மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Previous articleஅடுத்தடுத்து வெளியாகும் புது படங்கள்!! திரைக்கு வரும் முன்பே தொலைக்காட்சியில்!!
Next articleகர்நாடக முதல்வர் எடியூரப்பா 26 ஆம் தேதிக்கு பின் பதவி விலகுவார் !! ‘தலைமை முடிவுக்குக் கட்டுப்படுவேன்!!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here