இனி திமுக ஆட்சியில் மேயரின் ஹேண்ட் பேக் தூக்க புதிய போஸ்டிங்! மூச்சடைக்க மூன்று மாடி ஓடிய ஊழியர்!
மதுரை மாநகராட்சியின் மேயராக தற்போது பதவி வகுத்து வருபவர் இந்திராணி பொன் வசந்த்.இவர் பதவியேற்றத்தில் இருந்து இவருடைய கணவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மேயரின் அறையை ஆக்கிரமித்து அதனை ஒரு கட்சி அலுவலகம் போல் உபோயோகித்து வருகின்றனர்.
மேலும் முதன்முறையாக மேயருக்கென ஆலோசகர் என ஒருவரை நியமித்துள்ளனர்.இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.இதனை தொடர்ந்து மாமன்றக் கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்களே எங்கள் வார்டு பகுதியில் இருந்து வரும் எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என கூறியதோடு வெளிநடப்பு செய்தது.
மேயருக்கு எதிராக வணிகவரித் துறை அமைச்சரின் தொகுதியிலேயே எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என போராட்டம் நடத்தப்படும் என அமைச்சர் கூறும் வகையில் நடந்து கொண்டது ,நகர சபை கூட்டத்தில் மேயரின் வார்டிலேயே அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் கூறியது என தினந்தோறும் மதுரை மாநகராட்சி மேயர் குறித்து ஏதேனும் ஒரு சர்ச்சை உருவாகி கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் புகார்களை பெறுவதற்கான அதிநவீன குறைதீர் மையத்தின் தொடக்க விழா நடைபெற்றது.அந்த விழாவில் கலந்து கொள்ள நிதியமைச்சர் பழனிவேல் ,தியாகராஜன் ஆகியோர் வந்தனர்.அப்போது அவர்களை வரவேற்பதற்காக மேயர் இந்திராணி நீண்ட நேரம் கையில் பூங்கொத்து வைத்து கொண்டு காத்திருந்தார்.
அந்நேரத்தில் மேயரின் கைப்பையை மாநகராட்சி ஊழியர் ஒருவரிடம் கொடுத்திருந்தார்.அவரும் அதனை கையில் வைத்த படியே நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். அதனையடுத்து நிதியமைச்சர் வந்தவுடன் அவருடன் சேர்ந்து மேயர் இந்திராணியும் லிப்டில் சென்றுவிட்டார்.
அப்போது ஹேன்பேக்கை தூக்கிகொண்டு மூன்றாவது மாடி வரை மூச்சு இளைக்க ஊழியர் படிக்கட்டில் சென்ற அவலம் அரங்கேறியது. அதனையடுத்து நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவு பெற்ற உடன் நிதியமைச்சரை மேயர் வழி அனுப்பிய பிறகு மேயர் தன்னுடைய ஹேண்ட் பேக் எங்கே என ஊழியரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் உங்களின் அறையில் இருகின்றது என கூறவே அதனை எடுத்து வர மேயர் கூறியதால் அந்த ஊழியர் மீண்டும் ஓடி சென்று பேக்கை கொண்டு வந்து கொடுத்த உடன் அதனை வாங்கி கொண்டு மேயர் புறப்பட்டார். மேயரின் இந்த செயல் அங்குள்ள பணியாளர்களை முகம் சுழிக்வைக்கும் நிலையில் இருந்தது.மேலும் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.