பிரபல புனித ஸ்தலமான திருப்பதியில், தற்சமயம் தொற்று காரணமாக மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பி. ஆர். நாயுடு அறிவித்துள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கொரோனாவின் உலகளவு தாக்கம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. அதன்பின், சமீபத்தில் சீனாவில் ஹெச்.எம்.பி.வி வைரஸ் பரவலாக பரவி வருகிறது. தற்சமயம் இந்தியாவில் பெங்களூரு, அகமதாபாத்தை தொடர்ந்து தமிழகத்திலும் பரவி வருகிறது. இதன் காரணமாக பிரபல சுற்றுலா தளங்களில் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
தற்சமயம் மார்கழி மாதம் என்பதால் பெருமளவு கூட்டம் வருகின்றது. மேலும் இந்த மாதம் ஏகாதேசி வரவிருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது. எனவே, திருப்பதி தேவஸ்தானமும் வைரஸ் காரணமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருப்பதி மலையில் செய்தியாளர்களுடன், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி. ஆர்.நாயுடு பேட்டி அளித்துள்ளார். ஹெச் எம் பி வி என்ற ஹியூமன் மெட்டாப் நியுமோ வைரஸ் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.