சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி. ஹெச். டி படிப்புக்கான கையேடு சமீபத்தில் வெளியேறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கையேடிற்கு திராவிட விடுதலை கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கையேடு முற்றிலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை படி வெளியிடப்பட்டுள்ளது. அதில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு படிக்க சேர்வதற்கு தகுதியாக 10+2+3+2 அல்லது 11+1+3+2 அல்லது 10+2+4 என்று மாணவர்கள் படிக்கும் படிப்பின் வருட அளவை குறித்துள்ளது.
மத்திய அரசின் சமீபத்தில் வெளியான புதிய கல்விக் கொள்கையின்படி இளநிலை பட்டம் மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக நான்காண்டுகளாக அதில் உயர்த்தப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் இதனை முனைவர் பட்ட படிப்பில் சேர்த்து உள்ளது. மேலும் முனைவர் பட்டப்படிப்பையும் பட்ட தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய மாணவர் சங்கம் எதிர்த்து கண்டனம் தெரிவித்து வந்துள்ளது. அதில் பல்கலைக்கழகத்தில் கல்வி தகுதி இதுவரை பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளங்கலை மற்றும் முதுகலை ஆகியவை மட்டுமே உள்ளது. தற்சமயம் இளநிலை பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகள் என்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த கல்வி முறையை எதிர்த்து வரும் நிலையில் பெரியார் பல்கலைக்கழகம் மறைமுகமாக திணிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதலீடு வழக்குகளை திசை திருப்பும் வகையில் தமிழகத்தில் வேறு எந்த பல்கலைக்கழகமும் அனுமதிக்காத போது பெரியார் பல்கலைக்கழகம் மட்டும் கையேடு வெளியேற்றி இருப்பது ஏன்? என்றவாறு பலதரப்பட்ட கேள்விகளை முன்வைத்து, தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.