பான் கார்டு தொலைந்து விட்டால் மேற்கொள்ள வேண்டிய புதிய வழிமுறை!!

0
64
New procedure to follow if PAN card is lost!!
New procedure to follow if PAN card is lost!!

இந்தியாவில் ஆதார் கார்டின் உடைய பயன்பாடு எந்த அளவுக்கு உள்ளதோ அதே அளவிற்கு தற்பொழுது பான் கார்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

ஒருவரது நிதி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும் வருமானவரி கணக்குகளை நிர்வகிக்கவும் பான் கார்டுகள் மிகவும் அவசியமாகின்றன. எனவே தான் வேலைக்கு செல்லும் பலரும் கட்டாயம் அவர்கள் பெயரில் பான் கார்டு வைத்திருப்பார்கள். ஒரு சிலர் தங்களுடைய நிதி நிறுவனங்களுக்கு என அதனுடைய பெயர்களில் பான் கார்டுகளை வாங்கி வைக்கும் பழக்கங்களும் உள்ளது.

நம்முடைய பான் கார்டு தொலைந்து போய்விட்டது எனில் எந்தவித பயமும் வருத்தமும் இன்றி பான் கார்டு எண்ணை வைத்து டுபிலிகெட் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான வழிமுறையை இந்த பதிவில் காணலாம்.

✓ டூப்ளிகேட் பான் கார்டு பெறுவதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் TIN-NSDL platform. இந்த இணையதளத்திற்கு சென்று ‘Services’ என்பதில் ‘PAN’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

✓ அதில் ‘Reprint of PAN Card’ என்ற பகுதியில் ‘Apply’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்ப படிவம் தோன்றும் அதில் சரியான வகையை தேர்வு செய்ய வேண்டும்.

✓ கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி ‘Submit’ கொடுக்க வேண்டும் . உடனே உங்களின் பதிவு செய்யப்பட்ட ஈமெயில் ஐடிக்கு acknowledgement எண் வந்துவிடும்.

✓ பின்னர் அதில் கேட்கப்படும் தகவல்களை நிரப்பி, உங்களுக்கு பொருத்தமான பான் ஆவணத்தை தேர்வு செய்ய வேண்டும்.

✓ உங்களுக்கு e-PAN card அல்லது physical PAN card எது தேவை என்பதை தேர்வு செய்யவும்.e-PAN card தேர்வு செய்தால் உங்கள் ஈமெயிலுக்கு அது வந்து சேர்ந்துவிடும். physical PAN card என்பதை தேர்வு செய்தால் உங்கள் முகவரிக்கு பான் அட்டை அனுப்பி வைக்கப்படும்.

✓ இதனை நிறைவு செய்த பிறகு கட்டணம் செலுத்தும் பக்கம் தோன்றும். அதில் கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.

டூப்ளிகேட் பான் கார்டுக்கு ஆப்ஃலைனிலும் விண்ணப்பம் செய்யலாம். NSDL தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் செய்து விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டி அடையாள ஆவணங்களோடு அந்த விண்ணப்பத்தை 13/D Kurla Industrial Estate, Nari Seva Sadan Road, Narayan Nagar, Ghatkopar (West), Mumbai – 400 086 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களின் மூலம் நமக்கு டூப்ளிகேட் பான் கார்டு உங்களுடைய கைகளிலேயே கிடைத்துவிடும்.

Previous articleகனடா நாட்டில் பிரசவ வார்டு முழுவதும் இந்திய பெண்களாக நிறைந்துள்ளனர்!! அந்நாட்டு இளைஞர் சர்ச்சை பேச்சு!!
Next articleபொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு செல்பவர்களுக்கு..அரசின் சூப்பர் நியூஸ்!!