புதிய திட்டம்!! புதிய அணுகுமுறை!! புதிய கருவிகளுடன் களம் இறங்கும் ஈரான்!! பயத்தில் இஸ்லாமிய நாடுகள்!!

Photo of author

By Gayathri

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடந்து வரும் சமயத்தில் சமீப காலத்தில் இஸ்ரேல் ஈரானை தாக்கியது. இதற்கான பதிலடி நாங்கள் கண்டிப்பாக கொடுப்போம் என ஈரான் அரசு அறிவித்திருந்தது.

மேலும் இந்நிலையில், ஈரான் அரசு இஸ்ரேலுக்கு இஸ்லாமிய நாடுகள் உதவ கூடாது என்று செய்தி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலும் தன்னுடைய இரண்டாம் கட்ட தாக்குதலுக்கு ஆயுதமாகி வரும் நிலையில், தற்போது ஈரான் அரசு இஸ்ரேலுக்கு எதிராக போர் புரிய புதிய திட்டங்களை தீட்டி உள்ளதாகவும் மேலும் புதிய அணுகுமுறையோடு இந்த முறை நாங்கள் போர் புரிவோம் என்றும் தெரிவித்திருக்கிறது.

இவை மட்டுமின்றி ஈரான் அரசு போர் புரிய தேவையான நவீன ஆயுதங்களையும் தேவையான இடங்களுக்கு இடம்பெயர்த்து கொண்டிருக்கிறோம் என்று இஸ்லாமிய நாடுகளுக்கு செய்தி அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஈரான் அரசு சார்பாக இஸ்லாமிய நாடுகளுக்கு ராஜாங்க ரீதியாக மெசேஜ் அனுப்பப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறது.

இத்தனை நாட்கள் ஈரான் அமைதியாக இருந்தது.. ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை வைத்து proxy war.. அதாவது நேரடியாக போர் நடத்தாமல் மறைமுகமாக இஸ்ரேலை தாக்கி வந்தது. இதற்கு இடையில்தான் கடந்த மாதம் தொடக்கத்தில்.. மிகப்பெரிய அளவில் இஸ்ரேலை நேரடியாக ஈரான் தாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்பது ஹைப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஒரு ஆயுதமாகும், இது போன்ற பல அணு ஆயுதங்களையும் ஈரான் இஸ்ரேல் மீது பயன்படுத்த தன்னுடைய எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.