தமிழக மின் வாரியம் வெளியிட்ட புதிய திட்டம்! இனி அனைத்து இடங்களிலும் ஒரே மாடல் தான்!

0
276
New project released by Tamil Nadu Electricity Board! Now it's the same model everywhere!
New project released by Tamil Nadu Electricity Board! Now it's the same model everywhere!

தமிழக மின் வாரியம் வெளியிட்ட புதிய திட்டம்! இனி அனைத்து இடங்களிலும் ஒரே மாடல் தான்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது.அதில் அரசு வழங்கும் மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டுமானால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் வந்ததில் இருந்தே மின் வாரிய அலுவலகம் மற்றும் இ சேவை மையம் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதி வந்தது.

இதற்கான காலவகாசம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 தேதி முடிவடைய இருந்தது.ஆனால் பலரும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கவில்லை அதனால் கூடுதலாக இம்மாத இறுதி வரை காலவகாசம் வழங்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் பலரும் அவரவர்களின் வசதிக்கேற்ப இணையதளத்தில் மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர்.ஆனால் அவ்வாறு மின் கட்டணம் செலுத்தும் பொழுது போலி ரசீது வழங்கப்படுகிறது.அதனை தடுக்கும் வகையில் ஒரே மாடல் ரசீது வழங்கும் பணியை மின்வாரியம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

மின் கட்டண மையங்கள், இ சேவை மையங்கள் மற்றும் வங்கிகளில் மின் கட்டணம் நேரடியாக செலுத்தப்பட்டு வருகின்றது.அதே சமயத்தில் பாரத் பில் பே உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களிலும் மின் கட்டணத்தை செலுத்தலாம்.மேலும் மின்கட்டணம் மையங்களில் வழங்கப்படும் ரசீது வண்ணங்களில் இருப்பது மட்டுமல்லாமல் மின் வாரியத்தின் வங்கி கணக்கு எண் என பல விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

அதே சமயத்தில் இணையத்தில் வழங்கப்படும் ரசீது வெள்ளை தாளில் விண்ணப்பதாரர் பெயர் மற்றும் கட்டண உள்ளிட்ட சில விவரங்கள் மற்றும் கணினியில் டைப் செய்தது போல உள்ளது. அதனால் பல்வேறு வகையான புகார்கள் எழுந்து வருகின்றது.இந்த முறைகேட்டை தடுப்பதற்காக தற்போது மையங்களில் கட்டணம் செலுத்தும் போது வழங்கும் ரசீது போலவே இணையதளத்திலும் செலுத்தும் கட்டணங்களுக்கு ஒரே மாடல் ரசீது வழங்கப்படுகிறது.

Previous articleஅரசு வேலை ரத்து! பெற்ற  குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரமான தம்பதி! 
Next articleஅரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! சத்துணவில் புதிய மாற்றம்!