அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! சத்துணவில் புதிய மாற்றம்!

0
87
Government school students came out with a strange plan! A new change in nutrition!
Government school students came out with a strange plan! A new change in nutrition!

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! சத்துணவில் புதிய மாற்றம்!

பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு எளிதில் நோய் தொற்று பாதிக்கும் வாய்ப்புள்ளது.அதனை தடுக்கும் வகையில் அரசு பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்வதற்கு மகாராஷ்டிரா மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.

அந்த திட்டத்தின் மூலமாக அரசு பள்ளிகளில் வழங்கும் சத்துணவில் தினை வகைகளை சேர்க்க முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்யும் விதமாக அக்ரோஜி ஆர்கானிக் என்ற புத்தாக்க நிறுவனம் பள்ளி மாணவர்களுக்கு சத்து உணவில் தினை வகைகளை இலவசமாக வழங்க வேண்டும் என நடவடிக்கை மேற்கொண்டு சிறு விவசாயிகள் மற்றும் பெண்களிடமிருந்து திணை வகைகளை பெற்று விற்பனை செய்து வருகின்றது.

இந்த திட்டம் முதல்முதலாக மகாராஷ்டிராவில் புனே தாலுக்காவில் உள்ள ஏழு அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் கூடிய விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K