கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக மக்கள் ஓய்வு அறை திறப்பு!! காவல்துறையினர் பலர் பங்கேற்பு!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கமிஷனர் அலுவலகம் ஒன்று உள்ளது. அங்கு தினம்தோறும் ஏராளமான மக்கள் புகார் கொடுக்கவும் மற்றும் பல்வேறு தேவைகளுக்காகவும் வந்து செல்கின்றனர்.
இதனால் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள வரவேற்பு அறையின் அருகே பொதுமக்கள் காத்திருப்புக்காக பார்வையாளர்கள் ஓய்வு அறை திறக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான வேலைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், இந்த பார்வையாளர்கள் ஓய்வு அறையானது நேற்று திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். இவர் புதிய பார்வையாளர்கள் ஓய்வு அறையை ரிப்பன் கட் செய்து திறந்து வைத்தார்.
இந்த ஓய்வு அறையானது முழுவதுமாக குளிரூட்டப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் தாய்ப்பால் ஓய்வு என்று ஒரு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், இந்த ஓய்வு அறையின் உள்ளே நூலக வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கமிஷனர் மற்றும் துணை கமிஷனரை சந்திக்க தினம்தோறும் ஏராளமான மக்கள் வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் கமிஷனரை சந்திக்க இந்த அறையில் காத்திருக்கும்படி அனைத்து வசதிகளோடும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான அறிவிப்புகளும், காவல்துறை உயர் அதிகாரிகள் குறித்த தகவல்கள் பலவும் இந்த ஓய்வு அறையில் இடம் பெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பார்வையாளர்கள் ஓய்வு அறை திறப்பு விழாவில், துணை கமிஷ்னர்களான சந்தீஷ், சண்முகம், சுகாசினி மற்றும் பல உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். மேலும், இந்த ஓய்வு அறையானது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.