ரஜினியின் புதிய படத்தின் பெயர் “அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!!

Photo of author

By Jayachandiran

ரஜினியின் புதிய படத்தின் பெயர் “அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!!

Jayachandiran

ரஜினியின் புதிய படத்தின் பெயர் அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான “அண்ணாத்த” டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை, இயக்குனர் சிவா இயக்குகிறார்

சிவா ஏற்கனவே கார்த்தியின் சிறுத்தை, அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தலைவர் 168 திரைப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இதன்மூலம் இயக்குனர் சிவா ரஜியுடன் முதல் முறையாக சினிமா கூட்டணி சேர்ந்துள்ளார்.

இந்த படம் ரஜினியின் 168 -வது  திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்  தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் மற்றும் காமெடி நடிகர்களான சூரி, சதீஷ் ஆகியோர் பட்டையை கிளப்ப உள்ளனர்.

அண்ணாத்த என்ற டைட்டில் பெயர் மட்டுமே வெளியானது ரஜினியின் தோற்றம் வெளியாகவில்லை, இதில் ரஜினியின் தோற்றம் மாஸ் காட்டும் அளவிற்கு இருக்க வேண்டுமென்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.