ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்! இந்த சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு ஏதுவாக உள்ள நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பொங்கல் பண்டிகை என்றாலே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்தான். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள உள்ள காளைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்தது.
அதில் காளைகளுக்கு சரியான முறையில் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். காளைகளுக்கு மூன்றரை வயதிற்கு மேல் இருக்க வேண்டும் போன்றவைகள் தான். அதனைத் தொடர்ந்து இன்று ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள உள்ள மாடு பிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணையதளத்தில் தங்களுடைய பெயர் மற்றும் கடவு சீட்டு அளவிலான புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாடுபிடி வீரர்கள் அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியி செலுத்தி இருக்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெற இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை காண்பித்தால் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் அதே இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.