டிசம்பர் 14ஆம் தேதிக்கு மேல் அமல்படுத்த இருக்கும் ஆதாரின் புதிய விதி!! இனி அனைத்திற்கும் வசூலிக்கப்படும் கட்டணம்!!

0
150

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது ( UIDAI ) கடந்த சில மாதங்களாகவே ஆதா சம்பந்தப்பட்ட சில அறிவிப்புகளை தெரிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது டிசம்பர் 14ஆம் தேதியிலிருந்து புதிய விதி ஒன்றை அமல்படுத்த உள்ளது.

 

அதாவது, டிசம்பர் 14ஆம் தேதிக்கு மேல் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனில் அதற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுடைய ஆதார் அட்டைகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால் அதனை டிசம்பர் 14ஆம் தேதிக்குள் இலவசமாக செய்து முடிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே, இலவச ஆதார் அப்டேட்டிற்கான (Free Aadhaar Update) காலக்கெடுவாகும். ஆரம்பத்தில் இது ஜூன் 14, 2024 அன்று முடிவடைய இருந்தது. பின்னர் இலவச ஆதார் அப்டேட் காலம் மேலும் 2 முறை நீட்டிக்கப்பட்டது. முதலில் செப்டம்பர் 14 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, இறுதியாக டிசம்பர் 14 ஆம் தேதிக்கு வந்து நிற்கிறது.

 

எனவே இதற்கு மேல் இலவச கால அவகாசம் நீட்டிப்பு என்பது கிடைக்காது என்பதை உணர்ந்து அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டில் உள்ள பெயர் அல்லது விவரங்களில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனில் உடனடியாக ஆன்லைன் மூலம் செய்து முடிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

இந்த இலவச சேவை அதிகாரப்பூர்வ மை ஆதார் போர்டல் வழியாக மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது தற்போது வரையிலாக ஆன்லைன் வழியிலான ஆதார் அப்டேட் மட்டுமே இலவசமாக செய்ய கிடைக்கிறது. அதையே ஆதார் மையம் வழியாக செய்தால் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது இந்த கட்டண முறை ஆன்லைன் சேவைக்கும் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையில் விவரங்களை மாற்றுவதற்கான வழிமுறைகள் :-

 

✓ முதலில் அதிகாரப்பூர்வ யுஐடிஏஐ இணையதளத்தை (Official UIDAI Website) அணுகவும். அதாவது myaadhaar.uidai.gov.in க்கு செல்லவும்

 

✓ இப்போது மை ஆதார் (My Aadhaar) என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் அப்டேட் யுவர் ஆதார் (Update your Aadhaar) என்பதை கிளிக் செய்யவும்.

 

✓ இப்போது அப்டேட் ஆதார் டீட்டெயில்ஸ் ஆன்லைன் (Update Aadhaar Details Online) பக்கத்தில் டாக்குமெண்ட் அப்டேட் (Document Update) என்பதை தேர்ந்தெடுக்கவும்.

 

✓ ஆதார் அட்டை எண் (Aadhaar Card Number) மற்றும் கேப்ட்சா குறியீட்டை (Captcha Code) உள்ளிட்ட பின்னர் சென்ட் ஒடிபி (Send OTP) என்பதை கிளிக் செய்யவும்

 

✓ பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு (Registered Mobile Number) அனுப்பப்பட்ட ஒடிபி-ஐ பயன்படுத்தி லாக்-இன் (Login) செய்யவும்.

 

✓ இப்போது நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும். அதாவது பெயர் (Name), முகவரி (Address) அல்லது பிறந்த தேதி (Date of birth – DOB).

 

✓ புதுப்பிக்கப்பட வேண்டிய தகவலை வழங்கவும் மற்றும் அதற்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.

 

✓ கடைசியாக சப்மிட் அப்டேட் ரெக்வஸ்ட் (Submit Update Request) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். இதை செய்து முடித்ததும், உங்கள் விண்ணப்பத்தை கண்காணிப்பதற்கான அப்டேட் ரெக்வஸ்ட் நம்பர் (Update Request Number – URN) ஆனது எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்படும்.

 

குறிப்பாக, பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்களை ஒரு முறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Previous articleபிளாக்ல ரேஷன் அரிசி மூட்டைகளை விற்றால் தான் உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும்!! ஊழியர் அளித்த பதிலால் அதிர்ந்த மக்கள்!!
Next article20,000 மதிப்புள்ள இலவச சூரிய அடுப்பு!! பெண்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!!