விமானத்தில் எடுத்து செல்லக்கூடிய லக்கேஜிக்கான புதிய விதிகள்!! மத்திய அரசு!!

Photo of author

By Gayathri

விமானத்தில் பயணிக்க கூடிய பயணிகள் தங்களுடைய கையில் எடுத்துச் செல்லக்கூடிய பைக்கு சில விதிகளை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விதித்திருக்கிறது.

அதாவது விமானத்தில் செல்பவர்கள் 7 கிலோவிற்கு குறைவான ஒரு பையை மட்டுமே தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்பொழுது விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இணைந்து இந்த புதிய விதியினை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

✓ எகனாமிக் வகுப்பில் பயணம் செய்யக்கூடியவர்களுக்கு அதிகபட்சம் ஏழு கிலோ இடையிலான ஒரு பையை மட்டுமே எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

✓ முதல் வகுப்பு அல்லது பிசினஸ் கிளாஸில் பயணம் செய்பவர்களுக்கு அதிகபட்சம் 10 கிலோ எடையுள்ள ஒரு பையை மட்டுமே தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

✓ அதிலும் குறிப்பாக இந்த பையின் உயரம் 55 சென்டிமீட்டர் மிகாமலும் 40 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 20 சென்டிமீட்டர் அகலமும் இருக்க வேண்டும் என்று அந்த வீதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு :-

சென்ற மே 2 ஆம் தேதிக்கு முன்பு முன்பதிவு செய்த பயணிகளுக்கு பழைய லக்கேஜ் விதிகளை பொருந்தும் என்றும் மத்திய சுவை விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதற்குப் பிறகு டிக்கெட் புக் செய்தவர்கள் மற்றும் இனி டிக்கெட் புக் செய்பவர்கள் அனைவருக்கும் இந்த புதிய விதியானது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.