ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு  புதிய ரூல்ஸ்! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் !

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு  புதிய ரூல்ஸ்! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் !

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அனைத்து விதமான போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் தற்போது பெரும்பாலான மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய ரயில் பயணத்தையே விரும்புகின்றனர் .ரயில்களில் கட்டணம் குறைவு என்பதால் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம்.

இந்நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது,கொரோனா காலகட்டத்தில் இருந்தே ரயில் முன்பதிவிற்கு ரயில்வே நிர்வாகம் ஆன்லைன் முறையை மாற்றியுள்ளது.ஐஆர்சிடிசி  ஆப் மற்றும் இணையத்தளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு விதிகளை ரயில்வே நிர்வாகம் மாற்றியுள்ளது.

முதலில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன் உங்கள் கணக்கைச் சரிபார்க்க வேண்டும்.அதனையடுத்து பயனர்கள் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும்.மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாமல் முன்பதிவு செய்ய முடியாது.ஐ ஆர்சிடிசி  ஆப் அல்லது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வெரிபை ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பிறகு  உங்களின் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும்.அந்த இரண்டு தகவல்களையும் உள்ளிட்ட பிறகு வெரிபை பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.அதன் பிறகு நீங்கள் கொடுத்துள்ள மொபைல் நம்பர்க்கு ஒடிபி வரும் அதனை உள்ளிட்டு மொபைல் எண்ணை சரிபார்க்க வேண்டும்.அதனையடுத்து மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட்ட பிறகு உங்கள் மெயில் ஐடி சரிபார்க்கப்படும்.

Leave a Comment