PAN கார்டுகளை குறிவைத்து புதிய மோசடி!! எச்சரிக்கை விடுத்த PIB!!

0
77
New Scam Targeting PAN Cards!! PIB issued a warning!!
New Scam Targeting PAN Cards!! PIB issued a warning!!

ஆன்லைன் மோசடி என்பது தற்பொழுது பல விதங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதில் ஒரு சில வகைகளை மக்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. தற்பொழுது ஆன்லைன் மோசடிக்காரர்கள் பான் கார்டு வைத்து புதிய மோசடி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அதாவது, உங்களுடைய பான் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பான் கார்டு அப்டேட் செய்யவில்லை என்றால் 24 மணி நேரத்திற்குள் உங்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்ற செய்தியுடன் போலியான லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கும்.

இதனை உண்மையான நம்பி அந்த லிங்கை கிளிக் செய்பவர்களுக்கு அவர்களுடைய அக்கவுண்டில் உள்ள பணம் திருடப்பட்டுவிடும். இந்த புதிய மோசடி குறித்து PIB விளக்கம் அளித்துள்ளது.

அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்பு குழு இது குறித்து தெரிவித்திருப்பதாவது :-

இதுபோன்று செய்திகளை இந்தியா போஸ்ட் ஒருபோதும் அனுப்பாது என்றும் இது மாதிரியான குறுஞ்செய்திகள் வருகிறது என்றால் வாடிக்கையாளர்கள் எந்தவித லிங்கையும் கிளிக் செய்வதோ அல்லது தங்களுடைய சுய விவரங்களை பகிரவோ வேண்டாம் என்று PIB சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் உடைய பான் கார்டு அப்டேட் செய்யப்படவில்லை என்றால் 24 மணி நேரத்திற்குள் அவர்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்ற கூற்று முற்றிலும் தவறானது என்றும் PIB செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஜனவரி 11 முதல் Cognizant நிறுவனத்தில் இன்டர்வியூ!! இந்தியாவில் உள்ள அனைவருக்குமான வாய்ப்பு!!
Next articleஆதார் கார்டு மட்டும் போதும்.. ரூ.50,000 வரை கடன் உதவி!! மத்திய அரசு அறிவிப்பு!!