ரேஷன் கடைகளில் புதிய திட்டம்!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் இது அமல்!!
தமிழ்நாட்டில் தர்மபுரி மற்றும் நீலகிரியில் முதல்முறையாக ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் விரிவடைய உள்ளது.
உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் இத்திட்டம் நாளை தொடங்க உள்ளது.இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ,உணவுத்துறை அமைச்சர் சங்கரபாணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா .ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் .
ரேஷன் அட்டை ரீதியாக ரேஷன் கடைகளில் அரிசி ,பருப்பு ,சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.அட்டையை பொருத்து வழங்கப்படும் பொருட்களின் வீதமும் ,அளவும் மாறும்.
இத்திட்டத்தின் முலம் நீலகிரி மாவட்டத்தில் 2.29லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கு 2கிலோ ராகி வழங்கபடும் என்றார்.தற்போது 482மெட்ரிக் டன் கேழ்வரகு இருப்பு வைத்துள்ளதாகவும் அதில் நீலகிரி மாவட்டத்திற்கு மாதத்திற்கு 400மெட்ரிக் டன் தேவை.அதற்காக இத்திட்டத்திற்காக மத்திய உணவு கழகத்திலிருந்து 1,350மெட்ரிக் டன் கேழ்வரகு ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. வேளாண்மைத்துறையுடன் இணைந்து சிறுதானிய கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.மேலும் கூட்டுறவுத்துறை முலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது.