கல்யாணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு அம்மாநிலத்தைச் சேர்ந்த கல்யாணம் ஆகாத பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு புதிதாக ஓய்வூதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.
திருமணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சில நிபந்தனைகள் இருக்கின்றது.
நிபந்தனைகள்:
1.திட்டத்தில் பயன் பெற விரும்பும் பெண்கள் மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
2.50 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்களாக இருக்க வேண்டும்.
3.வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது.
4.மத்திய,மாநில அரசு பணியில் இருக்கக் கூடாது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:
திருமணம் ஆகாத பெண்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரரின் மத்திய பிரதேசத்தின் சொந்த சான்றிதழ்,ஒன்பது இலக்க கூட்டு ஐடி,வயது சான்றிதழ்,வங்கி பாஸ்புக்,திருமணமாகாதவர் பற்றிய அறிவிப்பு,வருமான வரி செலுத்துவோர் இல்லை என்பதற்கான சான்று அளிக்கப்பட்ட அறிவிப்பு போன்றவற்றோடு விண்ணப்பிக்கலாம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.இந்த திட்டத்தின் மூலம் திருமணம் ஆகாத 50 வயதிற்கும் அதிகமான பெண்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்று சொல்லப்படுகிறது.