வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது புதிய வாகன திருத்த சட்டம்!

Photo of author

By Sakthi

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது புதிய வாகன திருத்த சட்டம்!

Sakthi

Updated on:

சென்னையில் இன்று முதல் அமலுக்கு வரும் மோட்டார் வாகன விதிகளின்படி சாலைகளில் வாகனத்தில் செல்லும்போது ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களுக்கு வழி விட மறுத்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படவிருக்கிறது.

விபத்துக்களை தடுக்கும் விதத்தில் கடந்த 2019 ஆம் வருடத்தில் மத்திய அரசு மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இது தமிழகத்தில் வரும் 28ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படுகிறது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்கள் மீதும் வழக்கு பதியப்படும் என்று சொல்லப்படுகிறது. இது வாடகை கார் ஆட்டோக்களில் பயணம் செய்பவர்களுக்கு பொருந்தாது.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அரசின் அவசர போக்குவரத்திற்கு வழி விடாத நபர்களிடமிருந்து 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகை பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்றால் அபராத தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது அதே தவறை மீண்டும் செய்தால் 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வாகன பந்தயத்தில் ஈடுபட்டால் 1500 ரூபாய் முதல் வசூலிக்கப்பட்ட அபராத தொகை இனி 15,000 முதல் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்படும். வாகனங்களில் சைலன்சர் மாடிஃபிகேஷன் செய்தால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

சிக்னல் விதிகளை மீறுவோருக்கு வசூலிக்கப்பட்டு வந்த 100 ரூபாய் அபராதம் இனி 1000 ரூபாய் அதிகரித்து வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மியூசிக்கல் மற்றும் ஏர் ஹாரனை பயன்படுத்துவதற்கு அபராத தொகை 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படாத வாகனங்களை இயக்கினால் 2500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையில் அபராதம் வசூலிக்கப்படும் அதேபோல உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் இது 5000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

செல்போனில் பேசிக் கொண்டே வாகனங்களில் சில்வருக்கான அபராதம் முதல் முறை 1000 ரூபாயாகவும் இரண்டாவது முறை 10000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் இருவரும் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் இந்த விதிமீறலுக்கு தற்போது வரையில் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது என்பது.

ரேஸ் நடத்தினால்..

பழைய அபராதம் – ரூ-1000 – ரூ.1500

புதிய அபராதம்- ரூ-15,000 (முதல் முறை)

ஒரு முறைக்கு மேல்- ரூ.25,000

வாகனத்தில் மாற்றம் செய்தால்..

பழைய அபராதம் – ரூ-100

புதிய அபராதம்- ரூ-1000

சிக்னல் விதிமீறல்களுக்கு..

பழைய அபராதம் – ரூ. 100

புதிய அபராதம் – ரூ.500-1500

மியூசிக்கல் & ஏர் ஹாரன் வைத்தால்..

பழைய அபராதம் : ரூ.100

புதிய அபராதம் : ரூ.500

வாகன பதிவு இல்லாமல் இயக்கினால்..

பழைய அபராதம் : ரூ.2500

புதிய அபராதம் : ரூ.2500 – ரூ.5000

உரிமம் இல்லாமல் இயக்கினால்

பழைய அபராதம் : ரூ.2500

புதிய அபராதம் : ரூ. 5000

செல்போன் பேசிக் கொண்டே இயக்கினால்..

பழைய அபராதம் : ரூ.1000

புதிய அபராதம் : ரூ.1000 (முதல்முறை)

ஒரு முறைக்கு மேல் -ரூ.10,000

ஹெல்மெட் அணியாமல் இயக்கினால்..

பழைய அபராதம் : ரூ.100

புதிய அபராதம் : ரூ.500