Google மேப்பின் புதிய அப்டேட்!! தரவுகளை பாதுகாக்க செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள்!!

Photo of author

By Gayathri

Google மேப்பின் புதிய அப்டேட்!! தரவுகளை பாதுகாக்க செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள்!!

Gayathri

New Update of Google Maps!! Key Changes to Protect Data!!

Google நிறுவனம் ஆனது தன்னுடைய பயனர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான அப்டேட்டுகளை கொண்டு வந்த நிலையில் உள்ளன.

Google என்னுடைய முக்கிய செயலியான google மேப்ஸில் தற்பொழுது புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேடானது அறிக்கை மூலமாக கடந்தாண்டு வெளியிடப்பட்ட நிலையில் தற்பொழுது தான் செயல்பாட்டிற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்பெல்லாம் புதிய இடத்திற்குச் செல்கிறோம் என்றால் வழி கண்டுபிடித்துச் செல்வதே பெரும் போராட்டமாக இருக்கும். ஆனால், கூகுள் மேப்ஸ் அந்த பிரச்சினையை மொத்தமாக நீக்கிவிட்டது. பெரும்பாலான இடங்களுக்குக் கூகுள் மேப்பை பார்த்தே போய்விடலாம்.

மேப்பில் யூசர்களின் வசதிக்கேற்ப பல புதிய அம்சங்கள் கூகுள் கொண்டு வரும் நிலையில், தனியுரிமை சார்ந்து சில அப்டேட்களை வழங்கி வருகிறது. அதன்படி கடந்தாண்டு இது தொடர்பாகக் கூகுள் நிறுவனம் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. தங்கள் லொகேஷன் ஹிஸ்டரியை எப்படிச் சேமிக்க வேண்டும் என்பதில் கூகுள் முக்கிய மாற்றங்களை அறிவித்தது.

லொகேஷன் ஹிஸ்டரியை சேமிக்க இரண்டு வழிமுறைகள் :-

✓ மொபைலிலேயே சேமித்துக் கொள்ளலாம்

✓ என்கிரிப்ட் செய்யப்பட்ட காபியாக கிளவுட்டில் சேமிக்கலாம்.

கடந்தாண்டே கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், தற்பொழுது அதை செயல்படுத்தும் வண்ணம் அனைவருக்கும் மெயில்களை கூகுள் நிறுவனம் இப்போது எல்லா யூசர்களுக்கும் அனுப்பி வருகிறது.

கூகுள் மேப்பில் உள்ள எல்லா லொகேஷன் ஹிஸ்டரி தகவல்களும் டெலிட் ஆகும் முன்பு, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது. லொகேஷன் ஹிஸ்டரி டெலிட் ஆகும் தேதி என்பது ஒவ்வொரு யூசருக்கும் ஒவ்வொன்றாக இருந்தாலும் கூட, செட்டிங்கை உடனடியாக மாற்றிவிட்டால் நல்லது.

குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களாக லொகேஷன் ஹிஸ்டரி கிளவுட்டில் தான் சேமிக்கப்பட்டு வருகிறது.

லொகேஷன் ஹிஸ்டரியை ஆஃப்லைனில் சேமிப்பதில் ஏற்படும் இரண்டு முக்கிய சிக்கல்கள் :-

✓ ஏற்கனவே கடந்த 3 மாதங்கள் கிளவுட்டில் தான் லொகேஷன் சேமிக்கப்படுவதால் நீங்கள் ஆஃப்லைனுக்கு மாற்றும் போது 3 மாத லொகேஷன் ஹிஸ்டரி இருக்காது.

✓ இன்னொரு சிக்கல் ஒரு சாதனத்தில் மட்டுமே சேமிக்கப்படும் என்பதால் நீங்கள் வேறு மொபைலை பயன்படுத்தத் தொடங்கினால் லொகேஷன் ஹிஸ்டரி வராது.