தலைநகரம் 2 படத்தின் புதிய அப்டேட்! ரைட் இஸ் பேக்!!
சுந்தர் சி கடைசியாக இயக்கி, நடித்திருந்த படம் அரண்மனை 3 இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எதிர் மறையான விமர்சனங்களுடன் இந்த படம் வசூலில் வெற்றி பெற்றது.
இயக்குனர் சுந்தர் சி நடிகராக அறிமுகமான படம் தலைநகரம். இந்த படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியானது. சுந்தர் சி நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்திற்கு இமான் இசை அமைத்திருந்தார். தமிழில் இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்த படத்தை ரைட் ஐ தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தலைநகரம் இரண்டாம் பாகத்தின் படத்தை வி.இசட்.துரை இயக்கி வருகிறார். இவர் சுந்தர் சி நடிப்பில் ஏற்கனவே வெளிவந்த இருட்டு படத்தை இயக்கியவர் ஆவார்.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை (பர்ஸ்ட் லுக்) போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த முதல் பார்வை போஸ்டரில் ரைட் இஸ் பேக் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. தலைநகரம் படத்தில் சுந்தர் சி ‘ரைட்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் காரணமாகவே ‘ரைட் இஸ் பேக்’ என்னும் வாசகம் இதில் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.