பண மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க UIDAI யின் புதிய அப்டேட்!! மாஸ்க்டு ஆதார்!!

தனிநபரின் உடைய தரவுகள் மற்றும் சுய விவரங்கள் குறித்த முழு தகவல்களையும் ஆதார் கார்டின் மூலம் பெற முடியும். குறிப்பாக, நிதி சேவைகள் மற்றும் அரசாங்க சேவைகளை பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம்.

இதைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் ஆதார் எண்களை திருடி பண மோசடியில் ஈடுபடுகின்றனர் மற்றும் வங்கி விவரங்களை திருடுவதற்கும் மேம்படுத்தப்பட்ட முறைகளைப் பயன்படுத்துகின்றனர். இது போன்ற மோசடிகளில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் மாஸ்க்டு ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

மாஸ்க்டு ஆதார் விவரம் :-

உங்களுடைய ஆதார் நம்பரின் முதல் 8 இலக்கங்களை மறைத்து கடைசி 4 இலக்கங்கள் மட்டும் காண்பிக்கும். ஆனால் உங்கள் பெயர், புகைப்படம் மற்றும் QR குறியீடு போன்ற விவரங்களில் எந்தவித மாற்றமும் இருக்காது.

உதாரணமாக உங்களுடைய மாஸ்க்டு ஆதார் கார்டு வெர்ஷனை டவுன்லோட் செய்தால் அதில் முதல் 8 நம்பருக்கு பதிலாக “X” என்ற எழுத்து குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம் மோசடிக்காரர்களால் ஆதார் கார்டில் உள்ள நம்பரை வைத்து பணமோசடிகளில் ஈடுபட முடியாது.

மேலும், இந்த மாஸ்க்டு ஆதாரை பயன்படுத்துவதன் மூலம் மோசடி அபாயத்தை குறைக்க முடியும். மேலும் உங்களுடைய முக்கியமான தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அடையாளச் சரி பார்ப்பதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் ஆதார் கார்டை கேட்கின்றன. இதுபோன்ற சமயங்களில் மாஸ்க்டு ஆதாரை பயன்படுத்தலாம்.

மாஸ்க்டு ஆதார் கார்டை பெறுவதற்கான வழிமுறைகள் :-

UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் மாஸ்க்டு ஆதாரை PDF-ஆக டவுன்லோட் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்தவுடன் ஆதார் கார்டு தேவைப்படும் இடங்களில் எல்லாம் மாஸ்க்டு ஆதாரை பிரிண்ட் செய்து வைத்து பயன்படுத்த முடியும்.

✓ முதலில் https://uidai.gov.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தைப் பார்வையிடவும்.

✓ “My Aadhaar” பிரிவின் கீழ் “Download Aadhaar” என்பதைக் கிளிக் செய்யவும்.

✓ தற்போது வரும் புதிய பக்கத்தில், 12 இலக்க ஆதார் நம்பர் அல்லது 16 இலக்க விர்ச்சுவல் ஐடியை (VID), தேவையான பிற விவரங்களுடன் என்டர் செய்யுங்கள்.

✓ “Select your preference” என்ற பிரிவில், “Masked Aadhaar” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

✓ உங்கள் ஆதார் கார்டுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP பெறுவதற்கான ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.

✓ வெரிஃபிகேஷன் செயல்முறையை முடிப்பதற்கு OTP-ஐ என்டர் செய்யுங்கள்.அதன் பின்னர் மாஸ்க்டு ஆதார் கார்டு PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்.

இது பாஸ்வோர்ட் ஆல் பாதுகாக்கப்பட்டிருக்கும். உங்களுடைய டேட் ஆப் பர்த் பாஸ்வேர்டை என்டர் செய்வதன் மூலம் பிடிஎப்-ஐ திறந்து பார்த்துக் கொள்ள முடியும்.