UTS –இன் புதிய அப்டேட்!! தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!!
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய துறைகளில் ரயில்வே துறையும் ஒன்றாக உள்ளது. தினமும் இதில் கோடிக்கணக்கான பயனாளிகள், இதனால் கோடிக்கணக்கான வருவாய் என்று இதில் சிறப்பானது நிறைய இருக்கிறது.
தற்போது ரயில்வே துறையில் நிறைய அமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் மக்கள் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி மற்றும் யுடிஎஸ் என்ற மொபைல் செயலிகளை பயன்படுத்தலாம்.
முன்பதிவு இல்லாத டிக்கெட்களை யுடிஎஸ் செயலி மூலம் பெற்றுக்கொள்ளலாம். இவை அனைத்தும் டிஜிட்டல் டிக்கெட்களாக மொபைல் போன் மூலமாகவே பரிசோதகர்களிடம் காட்டி பயணம் செய்ய முடியும்.
யுடிஎஸ் மொபைல் செயலி மேலும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியை குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே செயல்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தென்னிந்தியாவின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தும் அப்டேட் வந்துள்ளது.
இந்த யுடிஎஸ் மொபைல் செயலியை இந்திய ரயில்வே மற்றும் CRIS தகவல் அமைப்பு மையம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இந்த செயலி ஆண்ட்ராய்டு, விண்டோஸ், ஐஓஎஸ் என பல்வேறு முறைகளில் செயல்படும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
முன்பதிவில்லா டிக்கெட் பெறுவது மட்டுமின்றி, பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட் ஆகியவற்றையும் பெறலாம். யுடிஎஸ் மொபைல் செயலியை பயன்படுத்தி ரயில் நிலையத்திற்கு அருகே வசிக்கும் மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ளலாம்.
இந்த முன்பதிவில்லா டிக்கெட்களை மொபைல் செயலி மூலம் பெறுவதனால் காகிதப் பயன்பாடு குறைந்து மக்களுக்கு சிரமம் ஏற்படாத பயணம் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.