பொங்கல் பரிசு பற்றிய புதிய அப்டேட்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

0
325
New Update on Pongal Gift! The information released by the Tamil Nadu government!
New Update on Pongal Gift! The information released by the Tamil Nadu government!

பொங்கல் பரிசு பற்றிய புதிய அப்டேட்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

பொங்கல் திருநாளின் முக்கிய நோக்கம்.தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் அமைகின்றது.மேலும் இந்த நாளை தமிழர்களுக்கே உரிய நாள் என  கூறப்படுகின்றது.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம்.கடந்த ஆண்டு பொங்கலுக்கு 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டது.

மேலும் அந்த பொருட்களை மக்கள் பெற ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படமால் இருக்க வேண்டும் என ஒவ்வொரு பகுதிகளிலும் குறிப்பிட்ட நபர்களுக்கு என தனித்தனியாக நேரம் மற்றும் தேதி குறிப்பிட்ட டோக்கன் வழங்கப்பட்டது.இந்நிலையில் நடபாண்டிற்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டது.ஆனால் அதற்கு அரசு உயரதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொருட்களில் சுகாதாரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஏழை எளிய மக்களுக்கு வேட்டி-சேலை வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையின் முடிவில் பொங்கலுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி-சேலையை அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅதிமுக முன்னாள் அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
Next article100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு அவசியமா? முக்கிய தகவலை வெளியிட்ட மின்சாரத்துறை அமைச்சர்!