ரயில்வே துறை வெளியிட்ட புதிய அப்டேட்! ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும்?
தற்போது கொரோனா பரவல் அனைத்தும் குறைந்த நிலையில் மக்கள் கூட்ட நெரிசலில் செல்வதை தவிர்த்துதான் வருகின்றார்கள். தொலைதூரப் பயணம் போன்றவை மேற்கொள்ளும் பயணிகள் அதிகளவு ரயில் பயணத்தையே விரும்புகின்றார்கள். அதனால் தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வகையான வசதிகளை வழங்கி வருகின்றது.
மேலும் ஒரு சில பகுதிகளுக்கு வாராந்திர சிறப்பு ரயிலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூடுதலாக ரயில் சேவை வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ரயில்களின் 3 டயர் ஏசி எக்கனாமி கோச்சில் பயணம் மேற்கொள்வது மலிவானதாகிவிட்டது.
கட்டணம் குறித்து பழைய முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. புது விதி நடைமுறைக்கு வந்தபின் ஏசி 3 எக்கனாமி கோச்சிங் கட்டணம் ஏசி 3 கோச்சின் கட்டணத்தை விட குறைவாக இருக்கும். இம்முடிவு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மேலும் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்திருக்கும் பயணிகளும் இந்த முடிவின் பலனை பெறுவார்கள் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆன்லைனிலும் கவுண்டரிலும் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே வாயிலாக பணம் திரும்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.