தமிழக அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! இந்த தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் உதவி தொகை ரூ 2 லட்சம்!

Photo of author

By Parthipan K

தமிழக அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! இந்த தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் உதவி தொகை ரூ 2 லட்சம்!

Parthipan K

New update released by the Tamil Nadu government! If these workers die in an accident, the assistance will be Rs 2 lakh!

தமிழக அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! இந்த தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் உதவி தொகை ரூ 2 லட்சம்!

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின் அறிவிப்பு  ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் கடிதங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற 79வது வாரியா கூட்டத் தீர்மானம் ஐந்தின் படி தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி செலுத்தும் தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் அவர்களுக்கு விபத்து மரண உதவி தொகையாக வழங்கப்படும் ஒரு லட்சத்தை 2 லட்சம் ஆக உயர்த்தி வழங்க ஆணை   வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை தமிழக அரசு மிக கவனத்துடன்  ஆய்வு செய்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் நிதி செலுத்தும் தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் விபத்து மரண உதவி தொகையானது ஒரு லட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக  ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

இதனால் ஏற்படும் செலவை தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டும். இந்த உயர்த்தப்பட்ட உதவி தொகை வருகின்ற ஏப்ரல் முதல் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறையானது தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி செலுத்தும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.