தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய இணையதளம்!! இனி அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில்!!

Photo of author

By Gayathri

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய இணையதளம்!! இனி அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில்!!

Gayathri

மின் கட்டணம் செலுத்துவதாக இருந்தாலும், புதிய மின் இணைப்பு தேவைப்படுவதாக இருந்தாலும் நேரில் சென்று விண்ணக்கும் முறையானது இருந்து வந்த நிலையில், தற்பொழுது நவீன யுகத்திற்கு ஏற்ப ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது, புதிய மின் இணைப்பை பெறுவது, மின் இணைப்பு தொடர்பான தேவைப்படும் ஆவணங்கள் தொடர்பாக தனித்தனி இணையதள முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் உருவாக்கியிருந்தது.

 

தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற மற்றும் தெரிந்து கொள்ள இணையதள சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் மின்சாரம் சார்ந்த அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும். இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு இருக்கிறது.

 

மேலும், TNPDCL ( https://www.tnpdcl.org/en/tnpdcl/)என்ற இந்த இணையதளத்தில் நீங்கள் மின் கட்டணம் செலுத்துவது, மின்வெட்டு பகுதிகளை அறிந்து கொள்வது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெறலாம்.

 

குறிப்பாக மின்வெட்டு நேரத்தில் தொடர்பு கொள்வதற்காக 94987 94987 என்ற 24 x 7 சேவை எண்ணையும் இந்த தளம் வழங்கி இருக்கிறது.