நியூசிலாந்து கேப்டன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு !!  யாரும் செய்யாத சாதனையை படைத்த வீரர்!!

Photo of author

By Vijay

cricket: நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரும் முன்னாள் கேப்டனுமான டிம் சவுதி ஓய்வு அறிவித்தார்.

நியூசிலாந்து அணியில் கேப்டன் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார். அடுத்த மாதம் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது இந்த போட்டி தான் தனது கடைசி போட்டி அதற்கு பின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவருக்கு தற்போது வயது 35 ஆகிறது.இவர் தனது சொந்த ஊர் ஹேமில்டன் மைதானத்தில் ஓய்வு பெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார். டிம் சவுதி இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டியில் மொத்தம் 385 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் 2008 ல் சர்வதேச போட்டிகளில் களமிறங்கினார். ஐ பி எல் தொடரில் 2011 முதல் விளையாடி வருகிறார் ஐ பி எல் ல் இவர் 54 போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 159 போட்டிகளில் விளையாடி 221 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். டி 20  போட்டிகளில் 126 போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 200 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளையும் டி 20 போட்டிகளில் 100 மேற்பட்ட விக்கெட்டுகளையும் எடுத்த சாதனையை செய்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார் டிம் சவுதி