பேட்டிங் மோசம்:பவுலிங் படுமோசம் !முதல் நாளில் முழுதாக ஆதிக்கம் செலித்திய கிவிஸ்

0
198

பேட்டிங் மோசம்:பவுலிங் படுமோசம் !முதல் நாளில் முழுதாக ஆதிக்கம் செலித்திய கிவிஸ்

கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இந்திய அணியின் இளம் தொடக்க ஜோடியான பிருத் வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும்  இறங்கினர். மயங்க் அகர்வால், கோலி, ரஹானே ஆகியோர் மோசமான ஷாட்கள் விளையாடி அவ்ட் ஆகி ஏமாற்றம் அளிக்க பிருத்வி ஷா (54), புஜாரா(55) மற்றும் ஹனுமா விஹாரி (51) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

ஆனால் பின் வரிசையில் வந்த பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் வந்த வேகத்தில் சென்றனர். கடைசி நேரத்தில் பூம்ரா மற்றும் ஷமி ஆகியோர் அதிரடியாக விளையாடி 10 மற்றும் 16 ரன்கள் சேர்த்ததால் இந்தியா ஓரளவு கௌரவமான ஸ்கோரான 242 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்த இந்தியாவை நியுசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிஸன் 5 தகர்த்தார். அவர் வரிசையாக ஹனுமா விஹாரி, புஜாரா, பண்ட், ஜடேஜா ஆகியோர்களின் விக்கெட்களை வீழ்த்தி அசத்த்னார். மேலும்  சவுத்தி மற்றும் போல்ட் தலா 2 விக்கெட்களையும் வேக்னர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து நியுசிலாந்து அணி தற்போது தங்கள் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்து விளையாடியது. பேட்டிங்கில் சொதப்பியது போல இந்திய அணி பவுலீங்கிலும் விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூம்ரா, ஷமி மற்றும் ஜடேஜா என யாராலும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. கிட்டத்தட்ட 23 ஓவர்கள் ஆடிய நியுசிலாந்து அணி ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்தது. டாம் லாதம் 27 ரன்களுடனும் பிளண்டல் 29 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

Previous articleமீண்டும் பிரதமர் பதவிக்கு காய் நகர்த்தும் மகாதீர் மொஹம்மத்
Next articleதிரௌபதி படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் பாலிவுட் பிரபலம் : இன்ப அதிர்ச்சியில் படக்குழுவினர்