போதும் முடிச்சிக்கிறேன்!! ஓய்வை அறிவித்த நியூசிலாந்து ஜாம்பவான்.. மறக்க முடியாத தோனி சம்பவம்!!

Photo of author

By Vijay

போதும் முடிச்சிக்கிறேன்!! ஓய்வை அறிவித்த நியூசிலாந்து ஜாம்பவான்.. மறக்க முடியாத தோனி சம்பவம்!!

Vijay

New Zealand legend announces retirement

cricket: நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் மார்டின் குப்டில் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டரில் களமிறங்கும் பேட்ஸ்மேன் தான் மார்ட்டின் குப்தில் இவர் கடைசியாக 2022 ஆம் ஆண்டுதான் நியூசிலாந்து அணிக்க விளையாடினார். இவர் தொடக்கத்தில் களமிறங்கி அதிரடியாக ரன் குவிக்க கூடிய வீரர். இவர் 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து பல சாதனைகளை செய்துள்ளார்.

இவர்  டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 47 போட்டிகளில் விளையாடி 2586 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ரன் 189. மேலும் இவர் டி 20 போட்டிகளில் 122 போட்டியில் விளையாடி 3531 ரன்கள் குவித்துள்ளார். இவரின் சிறந்த பேட்டிங் வெளிபடுவது ஒரு நாள் போட்டி தொடரில் தான். இவர் இதுவரை 198 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் மொத்தம் 7346 ரன்களை குவித்துள்ளார்.

ஒரு நாள் போட்டி தொடர்களில் தனி வீரர் நியூசிலாந்து அணிக்காக ரன் சேர்த்தவர்களில் இவர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.  ஒரு நாள் தொடரில் 2015 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி தனி ஆளாக 237 ரன் குவித்தார் இன்று வரை இது சாதனையாக உள்ளது. மேலும் 2022 ல் தோனியின் கடைசி போட்டியில் அவரை ரன் அவுட் செய்தார். அதிலிருந்து இந்திய ரசிகர்கள் இவரை மறக்க வில்லை. தற்போது இவர் ஓய்வை அறிவித்த நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.