நியூசிலாந்து முன்னாள் வீரர் லூயி வின்சென்ட் இவர் இதுவரை நியூசிலாந்து அணிக்காக 108 ஒரு நாள் தொடர் போட்டிகளிலும், 23 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் இவர் சூதாட்ட புகாரில் சிக்கி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் தடை விதிக்கப்பட்டார். தற்போது அவர் இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இவர் சூதாட்ட நிகழ்வுகளை பற்றி முதல் முறை உண்மையை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் சிறு வயதில் இருந்தே சண்டை சச்சரவான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் மேலும் எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. தனிமையில் இருந்தேன் என்னிடம் பேச கூட யாரும் இருப்பதில்லை.
இது போன்ற ஒரு சூழ்நிலையில் நான் இந்திய விளையாட வந்த போது ஒரு சூதாட்ட கும்பல் எண்ணை கட்டாயபடுத்தி சூதாட்டத்தில் ஈடுபட வைத்தனர். நான் நண்பர்கள் இல்லாதவன் என்பதால் அவர்களுடன் பழகிவிட்டேன். அவர்களோடு இணைந்து ஒரு முக்கிய நபராகவே மாறிவிட்டேன். அவர்களும் எனக்கு என்ன வேண்டுமோ அனைத்தையும் செய்தனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் நான் செய்வது தவறான ஒன்று என்று தெரிந்து விலக நினைத்தேன். ஆனால் என்னால் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. நான் பிறகு ஒரு முடிவு செய்தேன் என்ன செய்தாளும் வெளியே வர முடியாது ஒரே ஒரு வழி உண்மையை ஒப்புக் கொண்டு தண்டனை பெறுவது தான் என்று ஒப்புக்கொண்டேன். நான் செய்த தவறிலிருந்து வெளிவர 10 ஆண்டுகள் ஆனது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தான் அரவணைத்து.