9 ரன்களே வெற்றி இலக்கு: நியுசிலாந்து சாதனை வெற்றி !

0
162

9 ரன்களே வெற்றி இலக்கு: நியுசிலாந்து சாதனை வெற்றி !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 21 ஆம் தேதி வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இந்திய அணியில் ரஹானே (46), மயங்க்(34) மற்றும் ஷமி (21) ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் சொதப்ப இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக வீசிய டிம் சவுத்தி மற்றும் ஜேமீஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதையடுத்து நேற்ற்று தங்கள் இன்னிங்ஸை துவங்கிய நியுசிலாந்து அணி நிதானமாக விக்கெட்களைப் பறிகொடுக்காமல் விளையாடியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் அவுட் ஆகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்றொரு வீரரான ராஸ் டெய்லர் 44 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் நியுசிலாந்து 216 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 51 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்று தொடர்ந்து ஆடிய நியுசிலாந்து அணி மேலும் 132 ரன்கள் சேர்த்து 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களயும் இழந்து தங்கள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதன் மூலம் நியுசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சிறப்பாக பந்துவீசிய இந்தியாவின் இஷாந்த் சர்மா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இது அவரது 11 ஆவது 5 விக்கெட் இன்னிங்ஸாகும்.

அதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான பிருத்வி ஷா 14 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் வந்த புஜாரா ஆமை வேகத்தில் விளையாண்டு கடைசியி 11 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கபப்டட் கோலி 19 ரன்களில் வெளியேற, மயங்க் அகர்வால் அரைசதம் அடித்து 58 ரன்களில் அவுட் ஆனார். முதல் இன்னிங்ஸ் போலவே பொறுப்புடன் விளையாடி வரும் ரஹானே 25 ரன்களுடனும் ஹனுமா விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்துள்ளது. நியுசிலாந்தை விட இந்தியா 39 ரன்கள் பின் தங்கிய நிலையில் இருந்தது.

இதையடுத்து இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி மேற்கொண்டு 47 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 191 ரன்கள் சேர்த்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 183 பின் தங்கியதால் நியுசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 9 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. நியுசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய சவுத்தி 5 விக்கெட்களும் ட்ரண்ட் போல்ட் 4 விக்கெட்களும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் களமிறங்கிய நியுசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றி நியுசிலாந்து அணிக்கு 100 ஆவது வெற்றியாகும். இரண்டு  இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்துவீசிய சவுத்தி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Previous articleபெண்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! பீப் பாடல் புகழ் சிம்பு பேச்சு..!!
Next articleஇந்தியா முழுவதும் பரவியது அரவிந்த் கெஜ்ரிவாலின் திட்டம்: அதிரடி அறிவிப்புகள்