வானவேடிக்கை காட்டிய கிவி பேட்ஸ்மேன்கள் :3 பேர் அரைசதம் ! 204 ரன்கள் இலக்கைத் துரத்துமா இந்தியா ?
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் முதலில் ஆடிய நியுசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்துள்ளனர்.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடந்து கொண்டு இதில் டாஸில் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
தங்கள் மண்ணில் களம் இறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களைத் தாக்க ஆரம்பித்தனர். பூம்ராவைத் தவிர அனைவரின் பந்துகளையும் பவுண்டரிக்கும் சிக்ஸர்க்கும் அனுப்பினர்.இதனால் அந்த அணியின் ரன்ரேட் 10 க்கும் குறையாமல் சென்றது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தாலும் அடுத்தடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் அதிரடிடியைத் தொடர்ந்தனர்.
அந்த அணியின் மன்ரோ, கேன் வில்லியம்ஸன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு இலக்காக 204 ரன்களை நியுசிலாந்து நிர்ணயித்துள்ளது.
இந்தியா சார்பில் பூம்ரா, தாகூர், சஹால், துபே, ரவீந்தர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். வலுவான பேட்டிங் கொண்ட இந்திய அணி 204 ரன்களை எப்படி சேஸ் செய்ய போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.