நியுசிலாந்து 183 ரன்கள் முன்னிலை! இஷாந்த் ஷர்மா கலக்கல் பந்துவீச்சு !

0
137

நியுசிலாந்து 183 ரன்கள் முன்னிலை! இஷாந்த் ஷர்மா கலக்கல் பந்துவீச்சு !

நியுசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று முன் தினம் வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இந்திய அணியில் ரஹானே (46), மயங்க்(34) மற்றும் ஷமி (21) ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் சொதப்ப இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக வீசிய டிம் சவுத்தி மற்றும் ஜேமீஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதையடுத்து நேற்ற்று தங்கள் இன்னிங்ஸை துவங்கிய நியுசிலாந்து அணி நிதானமாக விக்கெட்களைப் பறிகொடுக்காமல் விளையாடியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் அவுட் ஆகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்றொரு வீரரான ராஸ் டெய்லர் 44 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் நியுசிலாந்து 216 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 51 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்று தொடர்ந்து ஆடிய நியுசிலாந்து அணி மேலும் 132 ரன்கள் சேர்த்து 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களயும் இழந்து தங்கள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதன் மூலம் நியுசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சிறப்பாக பந்துவீசிய இந்தியாவின் இஷாந்த் சர்மா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இது அவரது 11 ஆவது 5 விக்கெட் இன்னிங்ஸாகும்.

183 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா சற்று முன் வரை 16 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

Previous articleபெட்ரொலியம் – ரசாயன மண்டலம் ரத்து! தமிழக அரசாணை வெளியீடு
Next article‘பாரத் மாதாகீ ஜெய்’ கோஷம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் – மன்மோகன் சிங்!