பிறந்த குழந்தையை செல்போனில் புகைப்படம் எடுக்கக்கூடாது! அதற்கான காரணமென்ன?
முன்னோர்கள் காலத்தில் குழந்தை பிறந்தவுடன் தாய் சேய் இருவரையும் நன்றாகவும் பாதுகாப்பாகவும் பார்த்து கொள்வார்கள். அப்பொழுது ஃபோன் போன்ற எந்த ஒரு வசதிகளும் இருக்காது.
குறிப்பாக போன் மூலம் புகைப்படம் போன்றவற்றை எடுக்க இயலாது அதனால் குழந்தைகளின் பார்வை திறன் மிகுதியாக காணப்படும். நம் முன்னோர்கள் 100 வயது ஆனாலும் கண் கண்ணாடி பயன்படுத்த மாட்டார்கள்.
ஆனால் இந்த டிஜிட்டல் உலகம் வந்ததும் பிறந்த ஒரு மணி நேரம் ஆன குழந்தை முதல் 80 90 ஆன முதியவர்கள் வரை செல்பி எடுத்துக் கொண்டு அதனை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். பிறந்த குழந்தையை செல்போன் மூலம் போட்டோ எடுப்பதன் விளைவு அறியாமலும் அனைவரும் அந்த தவறை செய்து கொண்டு வருகின்றனர்.
பிறந்த குழந்தையை செல்போனில் போட்டோ எடுப்பதன் மூலம் அந்த குழந்தையின் கண் பார்வை திறன் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண் கண்ணாடி போடும் நிலை ஏற்படுகிறது.
இதனை தடுப்பதற்காக ஆன்லைனில் தொழில்நுட்பம் வாய்ந்த கேமராக்கள் விற்பனைக்கு உள்ளது. அதனை வாங்கி மிக முக்கிய தருணங்களில் மட்டும் குழந்தைகளை போட்டோ எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.