என்ன செய்ய போகிறார் இந்த தளபதி?

Photo of author

By CineDesk

மத்திய பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை தக்க வைத்தது. ஆட்சி பொறுப்பு ஏற்றதும் பல மாற்றங்களை செய்து குறிப்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் இயற்றியது.

அதற்கு நாடு முழுவதும் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் இருந்தன. அந்த வகையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று உரையாற்றும் போது, ராணுவம் தொடர்பான சில அறிவிப்புகளை வெளியிட்டார். 

அந்த அறிவிப்பில் விரைவில் முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது ராணுவ தளபதி பிபின் ராவத்தை, முப்படைகளுக்கான முதல் தலைமை தளபதியாக மத்திய அரசு நியமித்தது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் இருந்த பிபின் ராவத் ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து நேற்று ஓய்வு பெற்றதையடுத்து, இன்று முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பொறுப்பேற்றார்.

பதவியேற்ற பிறகு பிபின் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘முப்படைகளின் தலைமை தளபதி பணி கடினமான பணியாகும். முப்படைகளும் ஒருங்கிணைந்து ஒரு அணியாக செயல்படும். அணியாக, இலக்கை நோக்கி செயல்படுவோம்’ என்று தெரிவித்தார்.