வீட்டில் தனிமையில் இருந்த புதுமண பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : போலீசார் தீவிர விசாரணை..!!

Photo of author

By Parthipan K

வேலூர் அடுத்த உள்ள குடித்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் சங்கர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதில் மணமகன் சங்கருக்கும் மணமகள் மகாலட்சுமிக்கு 22 வயது வித்தியாசம் இருந்துள்ளது. புது மாப்பிள்ளை சங்கருக்கு 42 வயதும் புதுமண பெண் மகாலட்சுமிக்கு 20 வயதும் நிரம்பியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்த திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் எளிமையாக நடந்து முடிந்தது. இவர்கள் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் மகாலட்சுமி வீட்டில் தனியாக இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்த வந்த போலீசார் மணமகன் சங்கரையும் அவரது குடும்பத்தினரையும் தீவிரமாக விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் புதுமண பெண் மகாலட்சுமி என்ன செய்கிறார் என்று கவனிக்காமல் இருந்ததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் மகாலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மற்ற உறவினர்களையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.