கிராமபுறங்களில் ஒரு சில செயலை குறிப்பதற்கும் அதன்மூலம் கருத்துக்களை சொல்வதற்கும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே நம் முன்னோர்கள், பழமொழிகளை சொல்லி வந்தனர். பழமொழியின் உண்மையான கருத்தை அறியும் போதே அவற்றில் உள்ள அனுபவத்தையும் அறிவையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
தற்போது உள்ள உலகில் பழமொழிகளுக்கு அதற்குரிய அர்த்தங்கள் சொல்லப்படாமல், நாளடைவில் மருவி வேறு ஏதோ அர்த்தங்கள் சொல்லப்படுகிறது.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை…
பாய் தைப்பதற்கு கோரைப்புல்லை தான் பயன்படுத்துவார்கள். கழு என்பது ஒருவகையான கோரைப்புல். அந்த கழு என்கிற கோரைப்புல்லைப் பயன்படுத்தித் தைக்கப்பட்ட பாயில் கற்பூர வாசனை வரும் என்று கூறுகிறார்கள். இதைச் சொல்வதற்குதான் “கழு தைக்கத் தெரியுமாம் கற்பூர வாசனை” என்று சொன்னார்கள். காலப்போக்கில் கழு என்பது கழுதையாக மாறிவிட்டது.
இனி இந்த பழமொழியை தவறாக புரிந்து கொண்டு யாரும் கழுதையிடம் கற்பூரத்தை காட்டி உதை வாங்கிக் கொள்ளாதீர்கள்.