இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது

0
80

இந்தியாவில் கடந்த 21 நாட்களில் மிக அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நேற்று முன்தினம் இரவு 20 லட்சத்தை கடந்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி நிலவரங்கள் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி வெள்ளிக் கிழமை காலை 8 மணி நிலவரப்படி, நாட்டில் புதிதாக 62,538 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 20,27,074 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த இறப்பு எண்ணிக்கை 41,585 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரமட்டும் 886 பேர் இறந்துள்ளனர். அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,78,105 ஆக உயர்ந்துள்ளது. இது, மொத்த பாதிப்பில் 67.98 சதவிகிதமாகும். நாடு முழுவதும் தற்போது 6,07,384 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் மட்டும் ஒரே நாளில் 5,880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்வு. சென்னையில் மேலும் 984 பேருக்கு கொரோனா பாதிப்பு.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,109 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரேநாளில் 119 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 4,690 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரேநாளில் 6,488 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். மொத்தமாக இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோரின் எண்ணிக்கை 2,27,575 பேராக உயர்ந்துள்ளது.

author avatar
Parthipan K