அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!!

0
200

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை ,புதுக்கோட்டை தூத்துக்குடி ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, சேலம், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், நவம்பர் 4-ம் தேதி தீபாவளி அன்று திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், சென்னை, வேலூர், கடலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleநேற்றைய விலையில் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய (நவ-03) விலை நிலவரம்.!!
Next articleஅதிமுக ஜாதிக்கட்சி.!! ஓபிஎஸ்-இபிஎஸை விமர்சித்த கருணாஸ்.!!