உதயநிதி வெளியிட்ட அடுத்தடுத்த 4 போட்டோ.. காலில் விழுந்த எடப்பாடி!! கப்சிப் ஆன பாஜக!!

0
573
Next 4 photos published by Udayanidhi.. Edappadi fell on his feet!! Cupchip BJP!!
Next 4 photos published by Udayanidhi.. Edappadi fell on his feet!! Cupchip BJP!!

உதயநிதி வெளியிட்ட அடுத்தடுத்த 4 போட்டோ.. காலில் விழுந்த எடப்பாடி!! கப்சிப் ஆன பாஜக!!

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் ஆனது வரும் 27ஆம் தேதி நடைபெற போவதையொட்டி பிரச்சாரம் ஆனது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறங்கியுள்ளார்.

எப்பொழுதும் உதயநிதி பிரச்சாரத்தில் இறங்கினால் எதிர்க்கட்சிகளை கேலி கிண்டலுடன் விமர்சனம் செய்வது வாடிக்கையான செயல் என்றாலும் நேற்று ஒரு படி மேலே சென்று கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கலை காட்டி ஓட்டுகளை பெற்றதை போல் இங்கேயும் செங்கல் தூக்க ஆரம்பித்து விட்டார்.

எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது ஈரோடு இடைத்தேர்தலில் மேற்கொண்ட கூட்டத்தில் வெட்கம் மானம் மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால் என்று சரமரியாக திமுகவை எதிர்த்து பேசி இருந்தார்.

இதனை பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில் இன்று உதயநிதியும் அதனை கையில் ஆயுதமாக எடுத்துள்ளார்.

உதயநிதி கேலி கிண்டலுடன், நான்கு நாள் சேவ் பண்ணலைனா கூட மீசை தாடி இருக்கும் என்று கூறியதோடு, எடப்பாடி இரண்டு பெண்களின் ஷூக்கு பாலிஷ் போட்டதுதான் அவருடைய மீசை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதேபோல அதிமுக ஆட்சியில் இருந்தபோது தலைமை செயலகத்தில் சிபிஐ ரைட் நடத்திய பொழுதும் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு அரங்கேறிய போதும் அப்பொழுது அந்த மீசை என்ன செய்தது என்று சரமாரியான கேள்விகளை எழுப்பி அங்கிருந்தவர்களை பேச்சிலே உற்சாகப்படுத்த ஆரம்பித்தார்.

அதுமட்டுமின்றி சசிகலாவின் பாதத்தை தழுவி பதவி பெற்றவர்கள் எல்லாம் மீசை மானம் என பேசலாமா என்றும் கேள்வி எழுப்பினார்.அவர் பேசியது மட்டுமல்லாமல் செங்கல் மற்றும் சசிகலாவின் காலில் விழுந்தது என அடுத்தடுத்த போட்டோக்களை காண்பித்து வழக்கம் போல் தனது வேலையை காட்ட உதயநிதி ஆரம்பித்து விட்டார்.

அதுமட்டுமின்றி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும் தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு செங்கல் கூட அசராத நிலையில் வெட்ட வெளியாக இருக்கும் அந்த பரப்பளவை புகைப்படம் எடுத்து அதனையும் காட்டியுள்ளார்.அதுவே நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 240 கோடி செலவில் கிங்ஸ் மருத்துவமனை கட்டி விட்டோம், மதுரை கலைஞர் நூலகமும் கட்டி விட்டோம் என்று கூறினார்.

ஒவ்வொரு புகைப்படத்தையும் காட்டி இதுதான் அதிமுக மற்றும் பாஜகவின் இலட்சணம் என மக்களிடம் குறை கூறி  ஓட்டு கேட்க அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டார்.தற்பொழுது இந்த பிரச்சார பேச்சானது அரசியல் சுற்று வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Previous articleஉள்ளூர் கபடி போட்டி! இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியின் வீரருக்கு நேர்ந்த சோகம்! 
Next articleஓட்டுக்கு ரூ 4000 வீட்டுக்கு ஓர் குக்கர்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய திமுக!! ஈரோடு தேர்தலில் தொடர் பரபரப்பு!1