உதயநிதிக்கு தயாராகும் அடுத்த பெரிய பதவி!! கனிமொழிக்கு வர போகும் ஆப்பு!!

0
10
Next big post getting ready for Udayanidhi!!
Next big post getting ready for Udayanidhi!!

DMK: அரசியல் பயணத்தில் உதயநிதி ஸ்டாலின் காலடி எடுத்து வைத்த ஓரிரு மாதங்களிலேயே அமைச்சர் துணை முதல்வர் என்று பெரிய பதவிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. பலரும் கட்சிக்காக வேலை பார்த்து வந்த நிலையில் அவர்களுக்கு கிடைக்காத முன்னுரிமை கூட தனது மகன் என்ற காரணத்தினால் வாரிசு அரசியலை முன்வைத்து உதயநிதிக்கு ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கட்சிக்குள்ளேயே இதற்கு சிலரிடம் எதிர்ப்பும்  இருந்து வருகிறது.

குறிப்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரும் இதனை விரும்பவில்லை. இது ரீதியாக துரைமுருகன் மற்றும் உதயநிதிக்கு தான் முற்றல் போக்கு இருந்தது. அதனை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டனர். அதேபோல் தற்போது மதுரையில் ஜூன் ஒன்றாம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்க உள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் இந்த கருத்துக்கு திமுக முழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால் முன்னதாகவே 5 பொதுசெயலாளர்கள் உள்ள நிலையில் மேற்கொண்டு உதயநிதியை கொண்டு வர பிளான் இல்லை என கூறியுள்ளனர். ஆனால் துணை முதல்வர் பதவி கொடுத்ததும் உடனடியாக பொதுச்செயலாளர் பதவியை கொடுத்தால் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் விமர்சனத்திற்கு ஆளாக கூடும் என்பதால் அதனை தவிர்த்து வந்துள்ளார்களாம். அதற்கு பதிலாக தற்போது இந்த 5 நபர்களிலிருந்து ஒருவரை நீக்கிவிட்டு உதயநிதியை பொதுச்செயலாளராக மாற்ற உள்ளதாக தலைமை வட்டாரம் பேசுகின்றது. இதில் ஒருவர் தான் கனிமொழி, அதனால் அவரை பதவியை விட்டு நீக்கம் செய்யலாம் என கூறுகின்றனர்.

Previous articleஅப்பா வை விரட்ட மகன் போட்ட பலே திட்டம்!! கட்சியே இனி அன்புமணி க்கு தான்!!
Next articleபோக்குவரத்து ஊழியர்களின் கவனத்திற்கு….அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்!