அடுத்த முதல்வர் இவர்தான்!

Photo of author

By Sakthi

கடந்த ஆறாம் தேதி நடபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது இந்த நிலையில், வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இது தொடர்பாக பலவகையான கருத்துக்கணிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ காயநிர்மலேஸ்வரர் ஆலயத்திற்கு ஹரித்வார் ஸ்ரீகருட ஆனந்த சுவாமிகள் தரிசனம் செய்த பொதுமக்களுக்கு ஆசிவழங்கினார்..அதற்குப்பின் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தந்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர் இ.பி.எஸ் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வார் என தெரிவித்தார். அதேபோல நல்ல மழைபொழியும் விவசாயம் செழிக்கும் என தெரிவித்திருக்கிறார்.