அடுத்ததடுத்த பரப்பு.. தொடர்ந்து 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

Photo of author

By Rupa

#Madurai: சேலம் மாவட்டத்தை அடுத்து தற்பொழுது மதுரையை சேர்ந்த 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து ஒரே நிறுவனத்தை சேர்ந்த பள்ளி மற்றும் அதன் கிளைகளுக்கு வெடிகுண்டு மிரட்டலானது விடப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் சோதனை செய்யப்பட்டு இது போலியான தகவலென கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலானது விடப்பட்டுள்ளது.

எப்படி சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதோ அதே பாணியில் மதுரையில் இந்த எட்டு பள்ளிகளுக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர். உடனடியாக அந்தப் பள்ளிகளில் வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது. ஆனால் மிரட்டல் வந்தது போலியானது என்றும் ஆய்வு செய்ததில் எந்த ஒரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கவில்லை. இவ்வாறு மின்னஞ்சல் மூலம் போலியான தகவலை அனுப்பும் நபரை விரைவில் கண்டுபிடிப்பதாகவும் கூறியுள்ளனர்.