இந்த படத்திற்கு அடுத்தது தான் கைதி 2 படம்!! செய்தியாளர் சந்திப்பில் லோகேஷ் வெளியிட்ட தகவல்!! 

0
27
Next to this film is the film Prisoner 2!! The information released by Lokesh in the press conference!!
Next to this film is the film Prisoner 2!! The information released by Lokesh in the press conference!!

இந்த படத்திற்கு அடுத்தது தான் கைதி 2 படம்!! செய்தியாளர் சந்திப்பில் லோகேஷ் வெளியிட்ட தகவல்!!

கைதி படம் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த படம் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி வெளிவந்தது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கினார். இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் கார்த்தி நடித்திருந்தார். இந்த படத்தை எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்திருந்தார்.

கார்த்தி டில்லி என்ற கதாபாத்திரத்தில் மற்றும் அன்பு என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார்கள். மேலும் காவல் ஆய்வாளராக நரேன் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த படத்தின் இயக்குனர் மிகுந்த பாராட்டு பெற்றார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை முடித்து விட்டு ரஜினியின்  171 வது படத்தை இயக்கயுள்ளதாக தகவல் வெளிவந்ததுள்ளது. இதனையடுத்து இது குறித்து செய்தியாளர்கள் சத்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலளித்த இவர் இது குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிடும் என்று கூறினார்.

மேலும் இதற்கு முன்னதாக டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் கைதி 2 படத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் இவர் ரஜினி படத்தை முடித்து விட்டு அதன் பின்னர் கைதி 2 படத்தின் பணி ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைதி 2 படத்திற்கு ரசிகர்கள் முகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

author avatar
Jeevitha