ஹெலிகாப்டர் மூலம் அடுத்த பயணம்!! ராகுல் காந்தி மாநில மக்களை சந்தித்து ஆறுதல்!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மணிப்பூர் சென்றுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள மைதேயி சமூகத்தினர் , தங்களுக்கும் பழங்குடியின் அந்தஸ்து வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதற்கு சிறுபான்மை குடியில் உள்ள குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதனையடுத்து இரண்டு சமூக மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இதுவரை 100 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் 3000-திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் பதற்றம் நீடிக்கிறது .
காங்கிகரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று வன்முறையில் மிகவும் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூரி பகுதிக்கு சென்றுள்ளார். அப்பகுதில் 200 பேர் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். மேலும் பிஷ்னுப்பூர் மாவட்டம் மோய்ரங் பகுதியில் உள்ள முகாமிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார் .
இதனையடுத்து இன்று ஹெலிகாப்டர் மூலம் இம்பாலிக்கு சென்று ஏராளமான மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இது குறித்து முக்கிய 10 தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதனையடுத்து மாநிலத்தில் அமைதி திரும்ப மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை பலன் தரவில்லை. இன்னும் பிரதமர் மோடி நேரில் மக்களை சந்திக்கவில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. ராகுல் காந்தி நேற்று நிவாரண முகாம் சென்ற போது மணிப்பூர் போலீசார் அவரை அனுமதிக்க மறுத்து தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.