ட்விட்டரில் அடுத்து வரும் புதிய அப்டேட்! எலான் மஸ்க் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை! 

Photo of author

By Parthipan K

ட்விட்டரில் அடுத்து வரும் புதிய அப்டேட்! எலான் மஸ்க் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை! 

Parthipan K

Next update on Twitter! Action taken by Elon Musk!

ட்விட்டரில் அடுத்து வரும் புதிய அப்டேட்! எலான் மஸ்க் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

எலான் மஸ்க் என்பவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவர். இவர் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.அதன் பிறகு அவர் பல அதிரடி முடிவுகளை எடுத்தார்.ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.அதன் பிறகு ப்ளூ டிக் கணக்குக்கான கட்டணத்தை உயர்த்தினார்.

ப்ளூ டிக் கணக்குகளை பெற கட்டணம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ள முடியும் என்ற நிலை உருவானது.அதனால் போலி தகவல்கள் பகிரப்பட்ட நிலை ப்ளூ டிக் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது ப்ளூ டிக்கில் மற்றம் செய்யப்பட்டு க்ரே,கோல்ட் ,ப்ளூ என மூன்று கலர்களில் உருவாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கலரும் ஒவ்வொரு துறை சார்ந்த கணக்குகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ப்ளூ டிக் மட்டும் தனிநபர் கணக்குகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கணக்குகளும் முதலில் ட்விட்டர் குழுவால் சரிபார்க்கப்பட்ட பிறகு எந்த கணக்கிற்கு எந்த செக் மார்க் வழங்கப்படும் என பிரித்து வழங்கப்படும்.

குறிப்பாக இவை அனைத்தும் நடைமுறைக்கு வந்த பிறகு ப்ளூ டிக் கணக்கு பயன்படுத்துபவர்கள் பிரபலங்களை போல பெயர் மாற்றினால் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ட்விட்டரில் கடந்த 2018 ல் கேரக்டர் வரம்பு 140 ஆக இருந்து 280ஆக உயர்த்தப்பட்டது. தற்போது ட்விட்டரின் பங்கு அதிகரித்து வருவதால் கேரக்டர் வரம்பு 1000 ஆக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.