காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் MP விலகி BJP யில் இணைந்தார்! கலக்கத்தில் காங்கிரஸ்!

0
176

 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி அமோக வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியை தழுவியது. இதன் வெளிப்பாடாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதை தொடர்ந்து பல உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் சிறப்பான தலைமை இல்லாதது ஒரு காரணம் என்றே சொல்லலாம். தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் சிங் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஏற்றுக்கொண்டார்.

இவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங் மற்றும் மூத்த தலைவரும் ஆவார். இவரின் விலகல் காங்கிரஸ் கட்சியில் பெரிதும் சர்ச்சையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரை தொடர்ந்து அவரது மனைவி அமிதாவும் காங்கிரசில் இருந்து விலகியுள்ளனர்.

நேற்று விலகி உள்ள நிலையில் இன்று அவர்கள் பாஜகவில் சேரப்போவதாகக் கூறப்படுகிறது.
தனது ராஜினாமா குறித்து சஞ்சய் சிங் கூறுகையில், எங்களுக்கு காந்தி குடும்பத்துடன் நெருங்கிய உறவு இருப்பதாகவும், அந்த உறவுகளில் எந்த இடையூறும் இல்லை என்று கூறியுள்ளார்.

விலகளின் காரணம் பற்றி சஞ்சய் சிங் கூறும்போது, நான் நாற்பது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தேன் எனது பணி சீரும் சிறப்புமாக இருந்தது. ஆனால் கடந்த 15-20 ஆண்டுகளாக கட்சியில் நிலவி வரும் சூழல், கட்சியில் சரியான வழிநடத்த தலைமை இல்லை இதற்கு முன்பு அப்படி இருந்ததில்லை.

மேலும் சஞ்சய் சிங் கூறும்போது, நானும் எனது மனைவியும் மக்களவையில் இரண்டு முறையும், மாநிலங்களவையில் இரண்டு முறையும் பணியாற்றி இருக்கிறோம். எங்களது ராஜினாமா முடிவு 1-2 நாட்களில் எடுத்த முடிவு அல்ல நீண்ட காலம் யோசித்து எடுத்த முடிவு என சஞ்சய் சிங் விளக்கம் அளித்தார்.

மேலும் காங்கிரஸ் கட்சியில் மேலே குறிப்பிட்டது போல காங்கிரஸ் கட்சியில் சரியான தகவல் தொடர்பு இல்லை, ஒருங்கிணைப்பு இல்லை, தலைமை காலியாகவும் உள்ளது. கட்சியில் பல வேறுபாடுகள் நிலவி வருகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

கடந்த காலத்தில் கட்சி சிறப்பாக இயங்கி வந்தது. நாளை என்ன ஆகும், கட்சி என்ன நிலையில் இருக்கும் என்பது தெரியாமல் செயல்பட்டு வருகிறது. ஆனால் மறுபுறத்தில், இரண்டாவது முறை பதவி ஏற்ற பிரதமர் மோடி அனைவருடனும் அனைவரின் வளர்ச்சி நாட்டு மக்களின் எதிர்காலம் குறித்து மக்களிடையே பெரும் அளவிலான மதிப்பை பெற்று நல்ல முழக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.

மோடி சரியான முறையில் வழிநடத்துவார். அவர் என்ன சொல்கிறாரோ, அதை செய்கிறார். என்னை பொருத்த வரை நாட்டு மக்கள் அவருடன் இருப்பதாக நான் நினைக்கிறேன், நாட்டு மக்கள் அவர்களுடன் இருப்பதால், நானும் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். அடுத்து எனது திட்டம் பிஜேபி-யில் சேருவது குறித்து இருக்கும். நாளை பாஜகவில் சேருவேன் எனவும் அவர் கூறினார்.

சஞ்சய் சிங் மற்றும் அவரது மனைவி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருப்பது காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleதற்கொலை செய்து கொண்ட கஃபே காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு
Next articleவேலூர் தொகுதி! திமுக வெற்றி உறுதி? அதிமுகவே காரணம், சோகத்தில் OPS, EPS?